அமெரிக்காவை சேர்ந்த பேஸ்புக் நிறுவனம் தனது செயல்பாடுகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
“ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட 3.15 கோடி வெறுப்புணர்வு தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன. பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் கொரோனா குறித்து வெளியிடப்பட்ட 2 கோடி வதந்திகள் நீக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசிக்கு எதிரான 3,000 பதிவுகள் அகற்றப்பட்டன.
பேஸ்புக்கில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் 52 லட்சம் கருத்துகளை பதிவிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்கொலை மற்றும் உடலை வருத்திக் கொள்வது தொடர்பான 30 லட்சம் பதிவுகள், வன்முறை, ஆபாசமான 76 லட்சம் பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.