அமெரிக்க துணை அதிபராகிறார் சென்னை பெண் கமலா.. அடுத்த தேர்தலில் அதிபர்?

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. ஆளும் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்பே மீண்டும் அதிபர் வேட்பாளராக களமிறங்குகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடேன் போட்டியிடுகிறார்.


குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரும் அவரவர் கட்சிகளின் துணை அதிபர் வேட்பாளர்களை அறிவிப்பது வழக்கம். அதன்படி ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடேன், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை (வயது 55) அறிவித்துள்ளார்.
கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன்.

கணவர் டக்ளஸ், மகன் கோலி, மகள் எல்லாவுடன் கமலா ஹாரிஸ்.
கணவர் டக்ளஸ், மகன் கோலி, மகள் எல்லாவுடன் கமலா ஹாரிஸ்.

இவர் சென்னையை பூர்விகமாகக் கொண்டவர். கடந்த 1960-ம் ஆண்டில் ஷியாமளா மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு ஜமைக்காவை சேர்ந்த டொனால்டு ஹாரிஸை ஷியாமளா திருமணம் செய்தார்.
இத்தம்பதிக்கு கடந்த 1964 அக்டோபர் 20-ம் தேதி கமலா தேவி ஹாரிஸ் பிறந்தார்.

சட்டம் பயின்ற கமலா, ஜனநாயக கட்சியின் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக வளர்ந்து வருகிறார். அதிபர் வேட்பாளராக களமிறங்க தகுதியிருந்தும் போதிய நிதியுதவி இல்லாதால் அந்த போட்டியில் இருந்து கமலா விலகினார். தற்போது ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடேன், தனது கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை அறிவித்துள்ளார்.

சென்னையில் பாட்டி, தாத்தாவுடன் குழந்தையாக கமலா ஹாரிஸ் (இடது ஓரம்)
சென்னையில் பாட்டி, தாத்தாவுடன் குழந்தையாக கமலா ஹாரிஸ் (இடது ஓரம்)


கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறிய விவகாரத்தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது அமெரிக்க மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே இந்த முறை ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடேன் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.


இதன்படி இந்த முறை கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்க வாய்ப்புள்ளது. அமெரிக்க அரசியல் வரலாற்றின்படி துணை அதிபர், வரும் காலத்தில் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவது வழக்கம்.

தாய் ஷியாமளாவுடன் குழந்தையாக கமலா ஹாரிஸ்.
தாய் ஷியாமளாவுடன் குழந்தையாக கமலா ஹாரிஸ்.

அதன்படி சென்னை பெண் கமலா ஹாரிஸ் அடுத்த 4 ஆண்டுகளில் நடைபெறும் தேர்தலில் அமெரிக்க அதிபர் ஆவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
கடந்த 2014-ம் ஆண்டு டக்ளஸ் என்பவரை கமலா ஹாரிஸ் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் குழந்தைகள் இல்லை.

டக்ளஸ் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவர். முதல் திருமணம் மூலம் டக்ளஸுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்களும் கமலா ஹாரிஸுடன் வசிக்கின்றனர்.
இந்திய தாய், ஆப்பிரிக்க தந்தைக்கு பிறந்தவர் கமலா ஹாரிஸ்.

தாய் ஷியாமளா, சகோதரி மாயாவுடன் கமலா ஹாரிஸ்.
தாய் ஷியாமளா, சகோதரி மாயாவுடன் கமலா ஹாரிஸ்.

இவரது கணவர் டக்ளஸ், யூதர் ஆவார். அந்த வகையில் பல இனங்களின் சங்கமமாக கமலா ஹாரிஸ் விளங்குகிறார். எதிர்காலத்தில் அவர் அமெரிக்க அதிபராவது உறுதி என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *