வங்கிகளின் வைப்புத் தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழக (டிஐசிஜிசி) சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இதன்படி வங்கி திவாலானாலோ, தடைக்கு உள்ளானாலோ வைப்பு நிதி வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும். 90 நாட்களுக்குள் இந்த தொகை கிடைக்கும். இதற்கு முன்பு ரூ.1 லட்சம் மட்டுமே காப்பீடு வழங்கப்பட்ட நிலையில் தற்போது காப்பீடு தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.