முகக்கவசம் ஒழுங்காக அணியாத விமான பயணிகள் மீது நடவடிக்கை

முகக்கவசம் ஒழுங்காக அணியாத விமான பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் எச்சரித்துள்ளது.

மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், ஹரியாணா, குஜராத், மத்திய பிரதேசம், தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் நாள்தோறும் 15,000 பேருக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது. 

இதைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றுமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் (டிஜிசிஏ) முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

“விமான பயணிகள் முகக்கவசத்தை முறையாக அணிய வேண்டும். கொரோனா தடுப்பு விதிகளை மீறி ஒழுங்கற்ற முறையில் பயணிகள் நடந்து கொண்டால் அவர்களை விமானத்தில் இருந்து இறக்கிவிட வேண்டும். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை அதிகரித்து வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *