சென்னை மயிலாப்பூர் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக மணிமாறன் (வயது 57) பணியாற்றி வந்தார். அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. கடந்த 11-ம் தேதி குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

தமிழக காவல் துறையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட சென்னை மாம்பலம் இன்ஸ்பெக்டர் பால முரளிக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலமுரளிக்கு உயிரைக் காக்கும் தடுப்பு ஊசிகளை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வாங்கி கொடுத்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்ஸ்பெக்டர் பாலமுரளி அண்மையில் உயிரிழந்தார்.
காவல் துறையில் முதல்முறையாக கொரோனாவுக்கு உயிரிழந்த பாலமுரளியின் படத்துக்கு டிஜிபி திரிபாதி, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் உயரதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

அதைபோல பட்டினம்பாக்கத்தில் சிறப்பு சப் – இன்ஸ்பெக்டர் மணிமாறனின் உருவப்படத்துக்கு டிஜிபி திரிபாதி, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தமிழக காவல் துறையில் கொரோனாவுக்கு போலீசார் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் சம்பவங்கள் சக காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.