கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி (வயது 39) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்.
அவரைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் தோனி அறிமுகமானார்.
கடந்த 2007-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பதவியேற்றார். 2007-ல் டி20, 20011-ல் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, 2013-ல் சான்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை அவரது தலைமையிலான அணி வென்றது.

கடந்த 2014-ல் டெஸ்ட் கேப்டன்ஸி பதவியில் இருந்து 2017-ல் ஒரு நாள் போட்டி கேப்டன்சி பதவியில் இருந்தும் விலகினார்.
கடந்த 2014-ல் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓ்யவை அறிவித்தார். எனினும் ஒரு நாள் போட்டி, டி20 போட்டிகளில் விளையாடி வந்தார்.கடந்த 2019 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி விலகி இருந்தார்.
சுதந்திர தினமான இன்று இரவு 7.30 மணிக்கு அவர் அதிரடியாக தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.இதுவரை ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு அவர் நன்றியை உரிதாக்கியுள்ளார்.

எனினும் ஐபிஎல் போட்டிகளில் தோனி தொடர்ந்து விளையாடுவார். கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வந்த அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியில் பங்கேற்றுள்ளார்.
வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன.
எம்.எஸ். தோனி ஓய்வை அறிவித்த சிறிது நேரத்தில் சுரேஷ் ரெய்னா அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அதிரடியாக அறிவித்துள்ளார். அவருக்கு தற்போது 33 வயதே ஆகிறது. அதற்குள் ஓய்வு முடிவை அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.