ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்று வழங்க தபால் துறை ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் தங்களது ஆயுள் சான்றிதழை டிஜிடச்டல் முறையில் சமர்ப்பிக்க தபால் துறை ஏற்பாடு செய்துள்ளது.
அருகில் உள்ள தபால் நிலையத்துக்கு சென்று இந்த சேவையை பெறலாம். போஸ்ட் இன்போ என்ற செயலி மூலமாகவும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இதற்கு ஆதார் எண், செல்போன் எண், ஓய்வூதிய விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழுக்கும் ரூ.70 கட்டணம் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வட்ட தலைமை தபால் அலுவலக இயக்குநர் தெரிவித்துள்ளார்.