தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நடப்பு 2020-21-ம் கல்வியாண்டில் திறந்த நிலை, இணைய வழி, தொலைநிலை கல்வி படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையை நவம்பர் 30-ம் தேதிக்குள் நிறைவு செய்ய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியிருந்தது.

கொரோனா வைரஸ் காலத்தை கருத்தில் கொண்டு தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை விவரங்களை கல்வி நிறுவனங்கள் ஜனவரி 15-ம் தேதிக்குள் யுஜிசிக்கு அனுப்ப வேண்டும் என்று யுஜிசி செயலர் ரஜ்னிஷ் ஜெயின் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *