மின் கட்டணத்தை குறைக்கக் கோரி திமுக கருப்புக் கொடி போராட்டம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்.பி. எம்எல்.ஏ.க்களின் கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


ஊரடங்கு கால மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். அதை எளிய மாத தவணைகளில் செலுத்த அனுமதி வழங்க வேண்டும்.

இதை வலியுறுத்தி வரும் 21-ம் தேதி வீடுகளின் முன்பு கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும்.


விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார திருத்தச் சட்ட மசோதாவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.


தமிழக கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியிடம் தாரை வார்த்திடக் கூடாது.


சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலையில் விரைந்து நீதி கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *