திருவள்ளூர் ஒன்றியம் (காக்களூர் கிராமம்) ஒன்றிய கவுன்சிலர் த.எத்திராஜ், தீபாவளி பண்டிகையையொட்டி 4,000 குடும்பங்களுக்கு பட்டாசு, சுவிட்ஸ் ஆகியவற்றை கொடுத்து வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கடந்தாண்டை விட சிறப்பாக இல்லை. கொரோனா காரணமாக பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து தற்போதுதான் கொஞ்சம், கொஞ்சமாக இயல்பு நிலைமைக்கு திரும்பிவருகின்றனர்.

கொரோனா காலக்கட்டத்தில் திருவள்ளூர் தெற்கு மாவட்டம், திருவள்ளூர் தெற்கு ஒன்றிய அவைத் தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான த.எத்திராஜ், காக்களூர் கிராம மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினர். அரிசி, எண்ணெய், கோதுமை, காய்கறிகள் உள்ளடங்கிய நிவாரணப் பொருள்களை வீடு வீடாக சென்று வழங்கினார்.
தற்போது காக்களூர் கிராமத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 4000 குடும்பங்களுக்கு பட்டாசு, சுவிட்ஸ் பாக்ஸ்களை வீடு, வீடாக சென்று வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். த.எத்திராஜின் இந்தச் செயலுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இந்தக் கிராமத்தில் முக்கிய பிரச்னையாக இருந்த குடிநீர் பிரச்சனை மற்றும் சாலை, மின்சார பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு கண்டு மக்கள் சேவை செய்துவருகிறார்.