செப்டம்பர் 9-ல் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“திமுக பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 9-ம் தேதி காலை 10 மணி அளவில் காணொலி வாயிலாக நடைபெறுகிறது. இதில் திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்” என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

திமுக பொதுச்செயலாளராக இருந்த அன்பழகன் கடந்த மார்ச் மாதம் காலமானார். கொரோனா ஊரடங்கு காரணமாக கட்சியின் புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதில் தாமதம் ஏற்பட்டது.
திமுக பொருளாளர் துரைமுருகன் கடந்த மார்ச் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ளார்.
எனவே திமுக பொதுக்குழு கூட்டத்தில் புதிய பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முன்னதாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர் 3-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதில் பொதுக்குழு கூட்டம், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.