இடி, மின்னலின்போது மொபைல் பயன்படுத்தக்கூடாது என்று மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
பருவமழை தொடர்பாக மின் வாரியம் தரப்பில் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
உடைந்த சுவிட்சுகள், பிளக்குகளை மாற்ற வேண்டும். பழுதடைந்த மின் சாதனங்களை பயன்படுத்தக்கூடாது. மின் கம்பத்தின் மீது துணிகளை காயப்போடக் கூடாது. மின் கம்பத்தில் கால்நடைகளை கட்டக்கூடாது. மழை பெய்யும்போது மின் மாற்றிகள், கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகளின் அருகே செல்லக்கூடாது.
பில்லர் பாக்ஸ் அருகில் தண்ணீர் தேங்கி நின்றால் அருகில் செல்லக்கூடாது. இடி அல்லது மின்னலின்போது டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, தொலைபேசி, செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஜன்னல், கதவு அருகே இருக்கக்கூடாது.