காஞ்சிபுரத்தில் சத்யா நீரிழிவு க்ளினிக்கை நடத்தி, ஏழை எளிய மக்களுக்கு குறைந்த செலவிலும் இலவசமாக மருத்துவம் பார்த்து வருகிறார் டாக்டர் சத்தியநாராயணன். இவர் நீரழிவு நோயாளிகள் வெண்டைக்காயை சாப்பிடுவது குறித்து நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், அமெரிக்க நீரழிவு நிபுணர்கள், வெண்டைக்காயை சாப்பிடலாம் என்று கூறுகின்றனர். 8 வெண்டைக்காய்களில் கிட்டதட்ட 3 கிராம் பைபர் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில் 30 கேலரிகள் இருக்கிறது. இதில் கொழுப்பு இல்லை. ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
தசைகளை ரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்க வெண்டைக்காய் உதவுகிறது. செரிமானத்துக்கு உதவுகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. சோர்வு ஏற்படாமல் தடுக்கிறது. 2 முக்கியமான விஷயங்கள் உள்ளன. மெட்பாமின் மருந்தை சாப்பிடுபவர்கள் கண்டிப்பாக வெண்டைக்காயை சாப்பிடக்கூடாது. கிட்னியில் கல் இருப்பவர்கள் வெண்டைக்காயை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அலெர்ஜி பிரச்சினை இருப்பவர்கள் வெண்டைக்காயை சாப்பிட வேண்டாம். வெண்டைக்காயை சாப்பிட்டாலும் நீரழிவு நோயாளிகள், வழக்கமான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.