கொரோனா சடலத்தை எடுத்துச் செல்ல டிராக்டர் டிரைவராக மாறிய டாக்டர் – வைரலாக பரவும் வீடியோ

கொரோனா நோயாளியின் சடலத்தை எடுத்துச் செல்ல யாரும் முன்வராததால் டாக்டரே டிராக்டர் டிரைவராக மாறி சடலத்தை மயானத்துக்கு கொண்டு சென்றார்.


தெலங்கானா மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்த மாநிலத்தின் பெட்டாபள்ளி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தெங்குவாடா கிராமத்தை சேர்ந்த 43 வயது நபர் கொரோனா பாதிப்பில் இங்கு அனுமதிக்கப்பட்டார்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரிழந்தார். அந்த மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி கிடையாது. கொரோனா நோயாளியின் சடலம் என்பதால் வேறு எந்த வாகன ஓட்டிகளும் சடலத்தை எடுத்துச் செல்ல முன்வரவில்லை.


இதைத் தொடர்ந்து மருத்துவமனையின் டாக்டர் ஸ்ரீராம், அவரே சடலத்தை மயானத்துக்கு எடுத்துச் சென்று தகனம் செய்ய முடிவு செய்தார். ஒரு டிராக்டரை ஏற்பாடு செய்த டாக்டர், அதில் சடலத்தை ஏற்றி அவரே டிராக்டரை மயானத்துக்கு ஓட்டிச் சென்றார்.


உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் சிலரும் மருத்துவமனை ஊழியர்களும் அவருக்கு உதவியாக சென்றனர். முன்னெச்சரிக்கையாக டாக்டர் உட்பட அனைவரும் பாதுகாப்பு கவச உடை அணிந்திருந்தனர்.

டாக்டர் ஸ்ரீராமின் மனிதாபிமானம் தெலங்கானா மட்டுமன்றி இந்தியா முழுவதும் மக்களின் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *