கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியத்தை வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கை நீதிபதிகள் அசோக் பூஷண், சுபாஷ் ரெட்டி, எம்.ஆர். ஷா அமர்வு இன்று விசாரித்தது.
“டாக்டர்கள், சுகாதார ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் கடமை தவறும் மாநிலங்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
டாக்டர்களின் தனிமைப்படுத்திக் கொள்ளும் காலம் விடுப்பதாக கருதப்படுகிறதா, ஊதியம் பிடிக்கப்படுகிறதா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.