வாக்காளர் பெயர் சேர்ப்பதற்கான ஆவணங்கள் என்ன? என்பது குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முகவரி, வயது சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். முகவரி சான்றாக பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்கு புத்தகம், கிசான் அட்டை, அஞ்சலக கணக்கு புத்தகம், ரேஷன் அட்டை, வருமான வரி கணக்கு உத்தரவு, வாடகை ஒப்பந்தம், குடிநீர், தொலைபேசி, மின்சாரம், எரிவாயு இணைப்பு ரசீது, அஞ்சலக முகவரி அத்தாட்சி ஆகியவற்றை வழங்கலாம்.
வயது சான்றாக பிறப்புச் சான்று, 5, 8, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ள பாஸ்போர்ட், பான் அட்டை, ஒட்டுநர் உரிமம், ஆதார் அட்டையை அளிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.