வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் நீக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
“தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பிறகு ஆன்லைன் வழியாகவும் நேரடியாகவும் ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் பெயர் சேர்க்கக் கோரி விண்ணப்பித்துள்ளனர். பெயர்களை நீக்கக் கோரி 2 லட்சத்து 37 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் இந்த மாதம் இணையதளம் வாயிலாக வாக்காளர் பட்டியலை சரிபார்த்ததில் தமிழகத்தில் 56 ஆயிரம் இரட்டை பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அந்த இரட்டை பதிவுகளை நீக்கும் பணி மாவட்டவாரியாக நடைபெற்று வருகிறது” என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.