மழைக்கு முன்பாக வடிகால்கள் தூர்வாரப்படும்

சென்னையில் நகர வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
“சென்னையில் 3 திட்டங்கள் வாயிலாக மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. முடிவு பெறாத திட்டங்களை உடனடியாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பருவ மழைக்கு முன்பாக மழைநீர் வடிகால் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்படும்” என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *