சில தனியார் பள்ளிகளின் ஆன்லைன் கல்வியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இதை கருத்தில் கொண்டு ஆன்லைன் கல்வி புதிய விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இதில் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் எந்த வகையான உடைகளை அணிய வேண்டும் என்பது புதிய விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது.
மேலும் படுத்து கொண்டோ, கட்டிலில் சாய்ந்து கொண்டோ, ஒழுக்கமில்லாத நிலையிலோ ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் ஆன்லைனில் வகுப்பில் பங்கேற்கக்கூடாது. கேமரா கோணங்களை சரியான முறையில் அமைத்திருக்க வேண்டும். இவற்றை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என்று புதிய விதிகளில் கூறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.