மனைவி தொல்லை தாங்க முடியாமல் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமிக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உைடந்த ரஞ்சித் குமார் தமது மனைவியை கைது செய்ய கோரி திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளார். புகார் அளித்த உடனே மனைவியை காவல் துறையினர் கைது செய்யாததால் காவல் நிலையத்தின் அருகே இருந்த 120 அடி உயர செல்போன் டவரின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
மனைவி மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்ய வேண்டும். இல்லையெனில் செல்போன் கோபுரத்தின் உச்சியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.
அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார், மனைவியை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதை நம்பிய ரஞ்சித் குமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *