இ-பதிவு முறையில் திருமண நிகழ்ச்சிகளுக்கான பதிவு மீண்டும் சேர்ப்பு

இ-பதிவு முறையில் திருமண நிகழ்ச்சிகளுக்கான பதிவு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

1. திருமணத்திற்கு செல்ல இ-புதிவு செய்ய திருமண அழைப்பிதழ் கட்டாயம். அதை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

2. திருமண அழைப்பிதழில் பெயர் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

3. மணமகன், மணமகள், பெற்றோர் ஆகியோரில் ஒருவர் பெயரில் மட்டுமே இ-பதிவு செய்ய வேண்டும்.

4. தவறான தகவல், பலமுறை பயன்படுத்தினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

5. வாகனங்களின் பதிவு எண், ஆதார் எண், லைசென்ஸ், செல்போன் எண் கட்டாயம்

6. திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் சேர்த்து ஒரே இ-பதிவு

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *