சென்னைக்குள் பயணிக்கவும் இ-பதிவு கட்டாயம்

சென்னை மாநகருக்குள் பயணம் செய்யவும் இ-பதிவு கட்டாயம் என்று சென்னை காவல் துறை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதன்படி சென்னையில் ஒரு காவல் நிலைய எல்லைக்குள் இருந்து மற்றொரு காவல் நிலைய எல்லைக்குள் செல்ல பொதுமக்களுக்கு இ-பதிவு கட்டாயம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் கண்காணிப்பு, வாகன சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறும் வாகனங்களை பிடிக்க 348 செக்டார்கள் உருவாக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *