மின் கட்டண வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

மின் கட்டண வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.


ஊரடங்கு காலத்தில் மின் கணக்கீடு அளவிடப்படவில்லை. முந்தைய மின் கட்டணத்தின் அடிப்படையில் மின் கட்டணம் செலுத்தப்பட்டது. தற்போது கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.


இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ரவி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இரண்டு, இரண்டு மாதங்களுக்கு தனித்தனி கட்டண பில்களை தயாரிக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.


இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சுந்தரேஷ் ஹேமலதா அமர்வு விசாரித்தது. மின் கட்டண வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *