மும்முனை மின் இணைப்பு வழங்க உதவி பொறியாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு மும்முனை மின் இணைப்பு வழங்கும் அதிகாரம் உதவி செயற் பொறியாளர்களிடம் இருந்து வந்தது. தற்போது இந்த அதிகாரம் உதவி பொறியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தாழ்வழுத்த பிரிவில் புதிய மின் இணைப்பு, தற்காலிக மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக 50 கிலோ வாட் வரை ஒப்புதல் அளிக்கும் அதிகாரிம் உதவி பொறியாளருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 50 கிலோவாட் முதல் 150 கிலோவாட் வரை ஒப்புதல் வழங்கும் அதிகாரம் செயற்பொறியாளருக்கு அளிக்கப்பட்டுள்ளது.