மின்னணு பிரச்சினைக்கு தீர்வு காண மின் கட்டண சேவை மையம் தொடங்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
மின்வாரிய இணையதளம், மொபைல் ஆப் உள்ளிட்ட டிஜிட்டல்தளங்கள் வாயிலாக மின் கட்டணம் செலுத்தும்போது பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன.
அதாவது நுகர்வோரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது. ஆனால் அந்த பணம் மின் வாரியத்தை சென்றடைவது இல்லை.
மேலும் சர்வர் பிரச்சினையால் பல்வேறு நேரங்களில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும்போது சிக்கல் எழுகின்றன. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண தனி சேவை மையத்தை அமைக்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.
மின்னணு முறையில் மின் கட்டணம் செலுத்தும்போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் இந்த சேவை மையம் மூலம் தீர்க்கப்படும் என்று மின் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.