மின் வாரிய ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதேபோல தமிழக மின் வாரிய ஊழியர்களின் ஓய்வு வயதை அதிகரிப்பது குறித்து வாரியம் பரிசீலித்தது வந்தது.
இந்நிலையில் தமிழக மின் வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களின் ஓய்வு வயது 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் 31.05.2021 முதல் ஓய்வு பெறுவோருக்கும் இது பொருந்தும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.