சென்னை ஈசிஆர் சாலை 6 வழிச் சாலையாகிறது

சென்னை ஈசிஆர் சாலை 6 வழிச் சாலையாகிறது

சென்னை திருவான்மியூரில் தொடங்கும் கிழக்கு கடற்கரை சாலை (ஈசிஆர்) மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி வரை 135 கி.மீ. தொலைவுக்கு நீள்கிறது. இந்த சாலையில் திருவான்மியூர் முதல் மாமல்லபுரம் வரை ஏராளமான தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் செயல்படுகின்றன.

ஏராளமான வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைந்துள்ளன. மாமல்லபுரம் சிற்பங்கள் வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலாதலமாகும். இதன்காரணமாக ஈசிஆர் சாலையில் நாள்தோறும்  ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

வாகன அதிகரிப்பால் ஈசிஆர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற கடந்த 2012-ம் ஆண்டில் தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில் முதல்கட்டமாக திருவன்மியூரில் இருந்து அக்கரை வரை 6 வழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிக்காக ரூ.778 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சாலை விரிவாக்க பணிக்காக ஈசிஆர் சாலையின் இருபுறமும் உள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *