சமையல் எண்ணெய், பருப்பு விலை உயர்வு

சமையல் எண்ணெய், பருப்பு வகைகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

வரும் 14-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பலகாரங்கள் செய்ய பயன்படும் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பாமாயில் ரூ.70-ல் இருந்து 95 ஆகவும் சன் பிளவர் ஆயிர் ரூ.85-ல் இருந்து 125 ஆகவும் நல்லெண்ணெய் ரூ.180-ல் இருந்து ரூ.240 ஆகவும் கடலை எண்ணெய் ரூ.220-ல் இருந்து ரூ.320 ஆகவும் அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ உளுத்தம் பருப்பு ரூ.95-ல் இருந்து ரூ.120 ஆகவும் துவரம் பருப்பு ரூ.80-ல் இருந்து ரூ.118 ஆகவும் கடலை பருப்பு ரூ.56-ல் இருந்து ரூ.74 ஆகவும் பாசிப் பருப்பு ரூ.85-ல் இருந்து ரூ.102 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. இதேபோல மைதா, ரவா, கோதுமை மாவு விலையும் அதிகரித்துள்ளது. 

தீபாவளி நெருங்கும்போது எண்ணெய், பருப்பு விலை மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *