தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
“ஆந்திராவில் அவசர கதியில் பள்ளிகளை திறந்ததால் மாணவ, மாணவியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே வைரஸ் தொற்று பரவல் முற்றிலும் குறைந்த பிறகு பல்வேறு துறைகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கு சாத்தியமில்லை.
கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்ச்சி சான்று 7 ஆண்டுகள் நிறைவு பெற்றதால் அவர்களுக்கு பணி வழங்க இயலாது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.