புதிய கல்வி கொள்கை.. ஆசிரியர்கள் கருத்தறிய அழைப்பு…

புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து ஆசிரியர்கள் , தலைமை ஆசிரியர்கள் தங்களது ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

புதிய தேசிய கல்வி கொள்கையை தயாரிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் கடந்த 2017-ம் ஆண்டில் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு கடந்த 2019 ஜூன் 1-ம் தேதி வரைவு அறிக்கையை வெளியிட்டது.பொதுமக்கள் கருத்து தெரிவிக்க ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகு கல்வி கொள்கை இறுதி செய்யப்பட்டது.

ஆதரவும், எதிர்ப்பும்…

மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 29-ம் தேதி புதிய தேசிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியது. ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி, மும்மொழி கொள்கை, சம்ஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் பல விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் சரிசமமாக உள்ளன.
தமிழகத்தை சேர்ந்த கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறும்போது, மீண்டும் குலக் கல்விக்கே செல்கிறோம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

கஸ்தூரி ரங்கன் கருத்து

புதிய கல்வி கொள்கையை வரையறுத்த குழுவின் தலைவர் கஸ்தூரி ரங்கன் கூறும்போது, “தாய்மொழியில் கல்வி கற்பிப்பது கட்டாயமில்லை” என்று கூறியுள்ளார்.

புதிய கல்வி கொள்கையில் சம்ஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் விளக்கம் அளித்துள்ளார்.

புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து ஆசிரியர்கள் , தலைமை ஆசிரியர்கள் தங்களது ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
தேசிய கல்வி கொள்கை குறித்து ஆசிரியர்கள் , தலைமை ஆசிரியர்கள் தங்களது ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

அவர் கூறும்போது, “அமெரிக்கா, ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில்கூட சம்ஸ்கிருதம் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

மேற்கத்திய மேதைகள் சம்ஸ்கிருதத்தை கற்று இந்தியாவின் இதிகாசகங்களை மேற்கத்திய மொழிகளில் மொழிபெயர்த்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற காணொலி கருத்தரங்கில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “காகிதத்தில் சீர்திருத்தங்களை பட்டியலிடலாம். அவற்றை அமல்படுத்துவது கடினம் என்று சிலர் கூறுகின்றனர். புதிய கல்வி கொள்கை முழுமையாக, வெற்றிகரமாக அமல் செய்யப்படும்” என்று உறுதிபட தெரிவித்தார்.

ஆசிரியர்களுக்கு அழைப்பு

இந்த பின்னணியில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்ய மத்திய கல்வி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

“புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க https://innovateindia.mygov.in/nep2020/ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 31 வரை…

இந்த இணையத்தில் ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி இரவு 11.59 மணி வரை ஆசிரியர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்யலாம்.

இணையத்தில் லாகின் செய்து, அதில் கொடுக்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த நடைமுறை மிகவும் எளிமையாக இருக்கும். கேள்வி, பதில் வடிவில் ஆசிரியர்களின் கருத்துகள் கேட்டறியப்படும்.

நாடு முழுவதும் செயல்படும் அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும். அதற்கு முன்பாக புதிய கல்வி கொள்கை தொடர்பான முழு விவரங்களையும் ஆசிரியர்கள் அறிந்து கொள்வது அவசியம்.

பயனுள்ள யோசனைகளை கூறும் ஆசிரியர்களை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு அவர்களிடம் முழுவிவரங்களையும் கேட்டறிவோம்” என்று மத்திய கல்வி அமைச்சக செயலாளர் அனிதா கர்வால் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *