தேர்தல் கூட்டங்களை கண்காணிக்க குழு அமைக்க தமிழக சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வைரஸ் பரவல் சற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
தற்போதைய நிலையில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவதில் பொதுமக்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். தேர்தல் கூட்டங்களிலும் இதேநிலை நீடிக்கும் என்று அஞ்சப்படுகிறது. எனவே தேர்தல் கூட்டங்களை கண்காணிக்க சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு குழுக்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் விரைவில் வழிகாட்டு நெறிகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.