புதிய கட்சி தொடங்குவதற்கான காலஅவகாசம் 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியல் கட்சியை தொடங்க பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக புதிய கட்சியை தொடங்க 30 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்.
கொரோனா வைரஸால் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு மட்டும் புதிய கட்சி தொடங்குவதற்கான கால அவகாசம் 30 நாட்களில் இருந்து 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் இந்த காலஅவகாச தளர்வு மார்ச் 19-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.