எந்த வாக்குச்சாவடியிலும் வாக்களிக்கும் திட்டத்தை செயல்படுத்த தலைமைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மக்களவைக்கும் அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் தலைமைத் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தி வருகிறது.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் திட்டத்தை செயல்படுத்த தேர்தல் ஆணையம் ஏற்கெனவே திட்டமிட்டுள்ளது. அடுத்த கட்டமாக நாட்டின் எந்த வாக்குச்சாவடியிலும் ஓட்டு போடக்கூடிய வசதியை விரைவில் செயல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விளக்கம் அளித்துள்ளார். “புதிய திட்டத்துக்கான மாதிரி வாக்குப்பதிவு விரைவில் நடத்தப்பட உள்ளது. இதன்மூலம் நாட்டின் எந்த பகுதியிலும் வாக்குபதிவினை இதன் மூலம் பதிவு செய்யலாம்.
இதனை செயல்படுத்துவதற்கான ஆராய்ச்சி சென்னை ஐ.ஐ.டி. உள்ளிட்ட மற்ற கல்வி நிறுவனங்களிலும் நடைபெற்று வருகிறது” என்று சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.