பெட்ரோல் நிலையங்களில் இருந்து பிரதமரின் படங்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அந்த மாநில பெட்ரோல் நிலையங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன்கூடிய விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து பெட்ரோல் நிலையங்களில் இருந்தும் பிரதமரின் புகைப்படத்தை அகற்ற அந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.