வாக்காளர் பட்டியல் திருத்தம் நவ. 16-ல் தொடக்கம்.. ஜன. 15-ல் இறுதி வாக்காளர் பட்டியல்

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் வரும் நவம்பர் 16-ம் தேதி தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
வரும் 2021 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

வரும் நவம்பர் 16-ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அன்றைய தினம் முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், பெயர் நீக்கம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். அடுத்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

வாக்குச்சாவடி அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் அலுவலக நாட்களில் விண்ணப்பம் அளிக்கலாம். சிறப்பு முகாம்கள் குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும். www.nvsp.in இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் அட்டையை தொலைத்தவர்கள் தாலுகா அல்லது மண்டல அலுவலகங்களில் விண்ணப்பித்து பெறலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *