மின் கட்டண வழக்கு தள்ளுபடி

கொரோன ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் மொத்தமாக 4 மாதங்களுக்கும் சேர்த்து கணக்கிட்டு, முந்தைய மாதத்தில் செலுத்திய தொகை கழித்துக் கொள்ளப்படும் என்று தமிழக மின் வாரியம் அறிவித்துள்ளது.


இதை எதிர்த்து வழக்கறிஞர் ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 4 மாதங்களுக்கு மொத்தமாக மின் கணக்கீடு செய்யாமல் 2 மாதங்களுக்கு ஒரு பில் அடிப்படையில் மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அவர் மனுவில் கோரியிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *