மின் கட்டணம் செலுத்த 6 மாவட்டங்களுக்கு அவகாசம்

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த கடந்த 15-ம் தேதி கடைசி நாளாகும்.

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் தாழ்வழுத்த மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த வரும் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


இதேபோல நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மின் நுகர்வோர், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்தலாம் என்று தமிழக மின் வாரியம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *