மாதம்தோறும் 2,500 மின் இணைப்பை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தில் 100 யூனிட்கள் வரை இலவசம் ஆகும். 500 யூனிட்கள் வரை மானியத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
ஆனால் 500 யூனிட்டை தாண்டினால் முழுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
மின் பயன்பாடு 500 யூனிட்டுகளை கடந்த வீடுகளின் உரிமையாளர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு மின்பாட்டு யூனிட் அளவை குறைத்து கணக்கிடுவதாகக் கூறப்படுகிறது.
மேலும் மின்வாரிய ஊழியர்கள் வீடுகளுக்கு நேரடியாக செல்லாமல் தோராயமாக மின் பயன்பாட்டை கணக்கிடுவதாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய முறைகேடுகளை தடுக்க மின் வாரியம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி ஒவ்வொரு மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் மாதம்தோறும் 2,500 மின் இணைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று மின் வாரியம் உத்தரவிட்டுல்ளது.
இதுதொடர்பான சுற்றறிக்கை தமிழகம் முழுவதும் உள்ள 44 மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.