வாகனங்களில் அவசர கால பொத்தான் கட்டாயம்

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொது சேவை வாகனங்களிலும் இருப்பிட கண்காணிப்பு கருவி (விஎல்டிடி) பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இதேபோல அவசர கால பொத்தான்களையும் கட்டாயம் பொருத்த வேண்டும். இந்த விதிமுறைகளில் இருந்து இருசக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்று தமிழக போக்குவரத்து ஆணையர் தென்காசி எஸ்.ஜவஹர் தெரிவித்துள்ளார்.

வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் பதிவு செய்யப்படும் அனைத்து பொது சேவை வாகனங்களிலும் விஎல்டிடி, அவசர கால பொத்தான்கள் பொருத்தப்பட்டிருப்பது கட்டாயம். இந்த வசதிகள் இல்லாத வாகனங்கள் பதிவு செய்யப்படாது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் குற்ற செயல்களை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *