பொறியியல் கல்லூரி வகுப்புகளை டிச. 1-ம் தேதி தொடங்கலாம்

பொறியியல் கல்லூரி வகுப்புகளை டிச. 1-ம் தேதி தொடங்கலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) தெரிவித்துள்ளது.

அக்டோபர் 30-ம் தேதிக்குள் பொறியியல் கல்லூரி சேர்க்கையை முடிக்க வேண்டும். நவம்பர் 1-ம் தேதி முதலாம் ஆண்டுக்கான வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று ஏஐசிடிஇ முன்னர் அறிவித்திருந்தது. இதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 30-ம் தேதி வரை மாணவர் சேர்க்கையை நடத்தலாம். வரும் டிசம்பர் 1-ம் தேதி முதலாண் ஆண்டுக்கான வகுப்புகளை தொடங்கலாம் என்று ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *