பிளஸ் 1 சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ரத்து

சென்னை ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் தனியார் பள்ளிகள் பிளஸ் 1 மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்து இணைய வகுப்புகளை தொடங்கிவிட்டன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிகளை பள்ளிக் கல்வித் துறை கடந்த புதன்கிழமை வெளியிட்டது.

அதன்படி அதிக அளவிலான மாணவர்கள் விண்ணப்பிக்கும் பாடப்பிரிவுகளுக்கு மட்டும் நுழைவுத் தேர்வு நடத்தி அந்த மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் நுழைவுத் தேர்வு அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை திரும்ப பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *