தேர்தல் பணிக்கு முன்னாள் காவல் துறை, ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம்

தேர்தல் பணிக்கு முன்னாள் காவல் துறை, ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக காவல் துறை அறிவித்துள்ளது.

ஏப்ரல் 6-ம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் காவல் துறை, ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம். அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணியில் சேரலாம். 

அவர்களுக்கு 4 நாட்களுக்கான ஊதியம் வழங்கப்படும். போக்குவரத்து, உணவு படிகளும் வழங்கப்படும். கூடுதல் விவரம் தேவைப்படுவோர் 28449240 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக காவல் துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *