நடிகை சாந்தினியின் புகாரால் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சிக்கல்

நடிகை சாந்தினி கொடுத்த புகாரின் பேரில் அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

அ.தி.மு.க அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மணிகண்டனை அமைச்சரவையிலிருந்து நீக்கினார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை சாந்தினி என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகாரளித்தார். அதில், இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும் மூன்று தடவை கருவைக் கலைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

இந்தப் புகாரை விசாரிக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் குற்றம் சுமத்தப்பட்ட மணிகண்டன் தலைமறைவாகி விட்டார். ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

ALSO READ

இதையடுத்து பெங்களூருவில் நெல்லை பா.ஜ.க பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமாக தனிபங்களாவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீஸார் பிடித்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர். சிறையில் அவர் சொகுசாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் சைதாப்பேட்டை கிளைச் சிறையிலிருந்து புழல் சிறைக்கு அவர் மாற்றப்பட்டார்.

மணிகண்டன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தன் மீது கூறப்பட்ட புகாரில் எந்த உண்மையும் இல்லை. நான் யாரையும் ஏமாற்றவில்லை. புகார் கொடுத்துள்ள சாந்தினிக்கு ரூ.5 லட்சம் கடன் கொடுத்திருந்தேன். அதை திருப்பி கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இவ்வாறு பொய் புகார் கொடுத்துள்ளார்’ என்று கூறி இருந்தார்.இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பிலும் மணிகண்டனை போலீஸ்காவலில் எடுக்க அனுமதி கேட்டு மனு செய்யப்பட்டிருந்தது. இந்த இரண்டு மனுக்களை விசாரித்த நீதிபதி, போலீஸ் காவலில் எடுக்க அனுமதியளித்தார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

அதன்பேரில் மணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து அடையாறு மகளிர் போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்காக அவர், மதுரை, சென்னையில் உள்ள வீடுகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டார். முன்னதாக நடிகை சாந்தினிக்கு கருக்கலைப்பு செய்த டாக்டரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர், மணிகண்டன் வற்புறுத்தியதால்தான் கருக்கலைப்பு செய்ததாக போலீஸாரிடம் கூறியதாக தகவல் வெளியானது.

மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *