மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். அவர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள்  மே 6-ம் தேதி முதல் வரும் 20-ம் தேதி வரை பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்த விலக்கு அளிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *