பீகார் தேர்தல்.. கருத்துக் கணிப்பு பொய்த்தது…

பீகார் தேர்தலில் கருத்துக் கணிப்புகள் பொய்த்தன.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ஆளும் பாஜக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படும். ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 116, ஆர்ஜேடி கூட்டணி 120 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 69-91, ஆர்ஜேடி கூட்டணி 139-161 இடங்களைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டது.

ரிபப்ளிக் டிவி கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 91-117, ஆர்ஜேடி கூட்டணிக்கு 118-138 தொகுதிகள் கிடைக்கும் என்று கூறப்பட்டது. 

பெரும்பாலான தேசிய, பிராந்திய ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகள் ஆர்ஜேடி கூட்டணிக்கே அதிக தொகுதிகள் கிடைக்கும் என்று அறுதியிட்டு கூறின. அந்த கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி பாஜக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

‘தைனிக் பாஸ்கர்’ இந்தி நாளிதழ் மட்டும் பாஜக கூட்டணி 120 முதல் 127 தொகுதிகளிலும் ஆர்ஜேடி கூட்டணி 71 முதல் 81 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணித்திருந்தது. அந்த நாளிதழின் பாஜக கூட்டணி குறித்த கணிப்பு ஒத்துப் போகியுள்ளது.