எக்ஸ்பிரஸ் ரயில், விமான நிலையம் செல்லும் பயணிகள் மின்சார ரயிலில் பயணிக்கலாம்

எக்ஸ்பிரஸ் ரயில், விமான நிலையம் செல்லும் பயணிகள் மின்சார ரயிலில் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அப்போது சென்னை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இப்போது வரை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை.

சென்னையில் அரசு, தனியார் துறையை சேர்ந்த அத்தியாவசிய பணி ஊழியர்களுக்கு மட்டும் சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் விமான நிலையம், எக்ஸ்பிரஸ் ரயில்களில் செல்லும் பொதுமக்களும் இந்த சிறப்பு ரயில்களில் பயணம் செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *