சென்னையில் கொரோனா சீகிச்சைக்கு கூடுதல் படுக்கை வசதி

சென்னையில் கொரோனா சீகிச்சைக்கு கூடுதல் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு 1,200 படுக்கைகள் உள்ளன. இங்கு கூடுதலாக 1,250 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு 1,600 படுக்கைகள் உள்ளன. தற்போது கூடுதலாக 500 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

லேசான அறிகுறி உள்ளவர்கள் வீடுகளிலும், ஓரளவு பாதிப்பு உள்ளவர்கள் கண்காணிப்பு மையங்களிலும் தனிமைப்படுத்தப்படுகின்றனர். தீவிர பாதிப்புள்ளவர்கள் மட்டும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *