தமிழக ரேஷன் கடைகளில் வரும் நவம்பர் மாதம் வரே கூடுதலாக அரிசி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் கடந்த வியாழக்கிழமை நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
“கொரோனா வைரஸால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ரேஷன் கடைகளில் மக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசும் கூடுதலாக அரிசி வழங்கி வருகிறது. வரும் நவம்பர் வரை கூடுதல் அரிசியும் இலவசமாக அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படும்” என்று முதல்வர் தெரிவித்தார்.