சென்னையில் கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சென்னையில் புறநகர் ரயில் சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. அரசு, தனியார் துறைகளை சேர்ந்த அத்தியாவசிய பணியாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரயில்களில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு கூடுதலாக 40 மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்தது. இதன்படி நவ. 19-ம் தேதி முதல் சென்னையின் அனைத்து வழித்தடங்களிலும் 244 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன என்று ரயில்வே மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.