அத்தியாவசிய ஊழியர்களுக்காக கூடுதலாக 12 ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல், கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, அரக்கோணம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு நாள்தோறும் 40 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரயில்களில் ரயில்வே மற்றும் மத்திய, தமிழக அரசின் அத்தியாவசிய பணியாளர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரயில்வே ஊழியர்கள் மட்டும் பயணம் செய்தபோது சிறப்பு ரயில்களில் கூட்டம் குறைவாக இருந்தது.
ஆனால் இப்போது மத்திய, தமிழக அரசு ஊழியர்களும் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதால் கூட்டம் அலைமோதுகிறது.
எனவே காலை, மாலை நேரங்களில் கூடுதலாக 12 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.